சென்னை (08 டிச 2021): நடிகர் ரஜினியை வி.கே.சசிகலா சந்தித்துப் பேசியுள்ளார்.
நேற்று மாலை ரஜினி வீட்டுக்குச் சென்று பார்த்தார் சசிகலா. தாதா சாகிப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டாருக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று சசிகலா அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவை ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வரவேற்றனர். சசிகலா வருகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு நடிக்கவிருக்கும் தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்களைக் கேட்டு வருகிறார்.
சமீபத்தில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கும் சசிகலா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.