சென்னை (08 டிச 2021): சென்னையில் இன்றைய நிலவரப்படி தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்தது. அதேபோல் வடகிழக்குப் பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்தது.
இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது. மேலும், மழை காரணமாக தக்காளிச் செடிகள் அழுகியதால் தக்காளி சாகுபடி குறைந்தது.
ஆகவே, தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டிலேயே 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் சற்று விலை குறைய ஆரம்பித்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக மேலும் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் இன்று காலை கோயம்பேட்டில் தக்காளி சில்லரை விலையில் 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மீண்டும் இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
தக்காளி விலை – மழை விட்டும் தூரல் விடாத கதைதான்!
சென்னை (08 டிச 2021): சென்னையில் இன்றைய நிலவரப்படி
ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்தது. அதேபோல் வடகிழக்குப் பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்தது.
இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது. மேலும், மழை காரணமாக தக்காளிச் செடிகள் அழுகியதால் தக்காளி சாகுபடி குறைந்தது.
ஆகவே, தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டிலேயே 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் சற்று விலை குறைய ஆரம்பித்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக மேலும் தக்காளி விலை அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை கோயம்பேட்டில் தக்காளி சில்லரை விலையில் கிலோ 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மீண்டும் இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.