வங்கக்டலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் ஜாவீத்!

சென்னை (02 டிச 2021): வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயலுக்கு ‘ஜாவித்’ என பெயரிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் கன மழையால் தேங்கிய மழைநீர் இன்னும்…

மேலும்...

அதிமுகவில் திடீர் பரபரப்பு – காரணம் இதுதான்!

சென்னை (01 டிச 2021): அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா அதிமுகவின் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போதைய அதிமுக தலைமையாக உள்ள ஓபிஎஸ், இபிஎஸ் குறித்து எதிரான கருத்துக்களை அன்வர்ராஜா தெரிவித்து வந்த நிலையில், தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கும் எதிரான வகையில் செயல்பட்டதால் அன்வர்ராஜா நீக்கப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்….

மேலும்...

வேலூரில் நிலநடுக்கம்!

வேலூர் (29 ஆஆ 2021): வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில், பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. தற்போது இந்த நிலநடுக்கத்தால்…

மேலும்...

12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் அவசியம் -தமிழக சுகாதாரத்துறை!

சென்னை (28 நவ 2021): கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான், பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்திற்கு 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான நாடுகளின் பட்டியலில் 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதில் வளைகுடா நாடுகள் இடம்பெறவில்லை. 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு…

மேலும்...

பாஜகவுக்கு திமுக எம்பிக்கள் ஆதரவு?

புதுடெல்லி (28 நவ 2021): நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக காங்கிரசிடமிருந்து விலகி இருக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாளை நடக்க உள்ள தி.மு.க. எம்.பி.,க்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்றுநடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் தி.மு.க. பங்கேற்க உள்ளது. நாளை தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் விவசாய சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை முன்வைத்து, முந்தைய கூட்டத் தொடர்களைப் போலவே இந்தக் கூட்ட தொடரையும் முடக்குவதற்கு காங்கிரஸ்…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது!

சென்னை (28 நவ 2021): முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நெய்வேலியை சேர்ந்த பொறியாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் அளித்த புகாரின் பேரில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி மணி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். அவரைப்பிடிக்க 4…

மேலும்...

மாநாடு திரைப்படம் – பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!

சென்னை (28 நவ 2021): மாநாடு திரைப்படம் குறித்து வேலூர் இப்ராஹீம் கருத்து தெரிவித்துள்ளதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் உன்னிப்பாக கவனித்து, தங்களது கட்சிக்கு, சமூகத்திற்கு எதிரான கருத்துகள் இருந்தால் அதுகுறித்து தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். தலைவர்கள் விமர்சனம் செய்யும்போது அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடிக்கிறது. சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் குறித்தும் விமர்சனம் எழும்பியது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சிம்பு…

மேலும்...

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை கன்னியாகுமரி ராமநாதபுரம்…

மேலும்...

தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை (27 நவ 2021): சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்துவருகிறது. தெற்கு வங்கக் கடலில்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு…

மேலும்...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!

சென்னை (25 நவ 2021): தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, கேரளா,…

மேலும்...