மாணவர்களுக்கு வீடு தேடி பள்ளி – தமிழக அரசு அதிரடி!

சென்னை (30 செப் 2021)::  வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. கற்றல் இடைவெளியைப் போக்க எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு, பாடம் ஆசிரியர்கள்வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் அதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும், தங்களது பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களின் பகுதிக்கு சென்று, அங்குள்ள மாணாக்கர்களை ஒருங்கிணைத்து, தினசரி 2 மணி நேரம் பாடங்கள்…

மேலும்...

நிதியமைச்சர் பழனிவேல்ராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விமான நிலைய பாதுகாப்பு துறை அதிகாரிகள்!

சென்னை (30 செப் 2021): தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்களை எடுத்து வந்ததால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இரண்டு லேப்டாப்களை எடுத்துச் செல்லக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் பயணிகளுக்கு இல்லை என அமைச்சர் கூறியுள்ளார். அதற்குள் இவ்விஷயம் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அமைச்சரை…

மேலும்...

திடீரென காவல் நிலையத்திற்குள் நுழைந்த ஸ்டாலின் – அதிர்ந்த போலீஸ்!

தர்மபுரி (30 செப் 2021): பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வருகை தந்தார். தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட அவர், இரவு காரில் தர்மபுரி கிளம்பி சென்றார். அதியமான் கோட்டையில் கூடியிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது திடீரென அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் ஸ்டாலினின் கார் சென்றது. காரிலிருந்து இறங்கிய ஸ்டாலின், காவல் நிலையத்திற்குள் சென்று, எஸ்.ஐ.,யின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்திற்கு வந்த…

மேலும்...

எச்.ராஜா நேர் காணல்களை புறக்கணிக்க பத்திரிகையாளர்கள் திடீர் முடிவு!

சென்னை (28 செப் 2021):பத்திரிகையாளர்களை அவமரியதையாக விமர்சித்த பாஜக எச்.ராஜாவை புறக்கணிக்க பத்திரிகையாளர்கள் மன்றம் முடிவெடுத்துள்ளது. நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், எச்.ராஜா பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பல தரப்பிலும் கண்டனம் எழுந்தது. இதனை அடுத்து எச்.ராஜா நேர்காணல்களை புறக்கணிக்க சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் முடிவெடுத்துள்ளது.

மேலும்...

சென்னை விமான நிலைய நிர்வாக சீர்கேட்டால் காற்றில் பறந்த சமூக இடைவெளி!

சென்னை (06 செப் 2021): கோவிட் சூழலில் பயணிகளை வழி நடத்துவதில் சென்னை விமான நிலைய நிர்வாக சீர்கேடு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை வளைகுடா நாடுகளிலிருந்து ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் தரையிரங்கின. அதில் வந்த ஏராளமான பயணிகளை வழி நடத்துவதில் சென்னை விமான நிலைய நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது. கோவிட் பரவலை தடுக்க எடுக்கப்படும் மிக முக்கிய நடவடிக்கை சமூக இடைவெளி. ஆனால் அது சென்னை விமான நிலையத்தில்…

மேலும்...

கொரோனா பரவல் – சிக்கலில் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (04 செப் 2021): கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் நடத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் 15ஆம் தேதி வரை பல்வேறு சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட முடியாத…

மேலும்...
TN-Students

ஆசிரியர்கள் மணவர்கள் அதிர்ச்சி – இருவருக்கு கொரோனா பாதிப்பு!

கடலூர் (04 செப் 2021): கடலூர் மஞ்சக்குப்பம் கோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் அரியலூர் அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் தமிழக அரசு ஆலோசனை நடத்தியதன் பயனாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக 9, 10, 11,…

மேலும்...

கோர விபத்து – திமுக எம்.எல்.ஏ.மகன் உட்பட 7 பேர் பலி!

பெங்களூரு (31 ஆக 2021): கர்நாடகாவில் ஏற்பட்ட கார் விபத்தில் ஓசூர் திமுக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நள்ளிரவில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த, சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் ஒருவர் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் என தெரிய வந்துள்ளது. இதுதவிர, கேரளாவை சேர்ந்த…

மேலும்...

ஆபாச வீடியோ பாஜக தலைவர் கே.டி .ராகவனுக்கு சீமான் ஆதரவு!

சென்னை (30 ஆக 2021): ஆபாச வீடியோவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் கே.டி.ராகவனுக்கு நாம் தமிழர் தலைவர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவில் முக்கிய தலைவராக இருந்தவர் கே.டி .ராகவன். அவரின் ஆபாச வீடியோவை மதன் என்பவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தற்போது மதன் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கே.டி .ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யவில்லை. இப்படிப்பட்ட…

மேலும்...

பொள்ளாச்சியை அதிர வைத்த இன்னொரு சம்பவம் – யாரந்த யமுனா?

பொள்ளாச்சி (30 ஆக 2021): 17 வயது சிறுவனை 19 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் யமுனா.. 19 வயதாகிறது. அதே பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன்.. 12-ம் வகுப்பு படிக்கிறார். ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த யமுனாவுக்கும், அந்த சிறுவனருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர். இந்நிலையில் கடந்த 26ம்…

மேலும்...