சென்னை விமான நிலைய நிர்வாக சீர்கேட்டால் காற்றில் பறந்த சமூக இடைவெளி!

Share this News:

சென்னை (06 செப் 2021): கோவிட் சூழலில் பயணிகளை வழி நடத்துவதில் சென்னை விமான நிலைய நிர்வாக சீர்கேடு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை வளைகுடா நாடுகளிலிருந்து ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் தரையிரங்கின. அதில் வந்த ஏராளமான பயணிகளை வழி நடத்துவதில் சென்னை விமான நிலைய நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது.

கோவிட் பரவலை தடுக்க எடுக்கப்படும் மிக முக்கிய நடவடிக்கை சமூக இடைவெளி. ஆனால் அது சென்னை விமான நிலையத்தில் காற்றில் பறந்தது.

அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த ஏராளமான பயணிளுக்கு இம்மிகிரேஷன் கவுண்டர் இரண்டுதான் திறக்கப்பட்டிருந்தது. மற்ற கவுண்டர்கள் மூடப்பட்டிருந்ததால் பயணிகள் முண்டியடித்துச் சென்றனர். இதனால் சமூக இடைவெளி அறவே கடைபிடிக்கப்படவில்லை.

பயணிகளை சரியாக வரிசையில் வைக்க உரிய ஏற்பாடுகளோ, எதுவும் இல்லை, இதனால் ஏராளமான பயணிகள் கூச்சலிட்டனர். சிலர் சண்டையிட்டுக் கொண்டதையும் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் காட்டுகின்றன. பல மணிநேர காத்திருப்புக்குப் பிறகு மேலும் இரண்டு கவுண்டர்கள் திறக்கப்பட்டன. என அப்போது வந்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அட்டவனைப்படியே விமானங்கள் வருகின்றன என்றும், அதில் எத்தனை பயணிகள் வருகின்றனர். என்பது விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிந்தும், முன்னேற்பாடுகள் செய்யாமல் பயணிகளை வழி நடத்த தவறியதால் கோவிட் பரவலுக்கு சென்னை விமான நிலைய நிர்வாகமும் ஒரு காரணமாக அமைந்து விடுமோ என்று பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply