ஒன்றிய அரசு என்பதற்கு நடிகர் வடிவேலு அவரது பாணியில் பதில்!

சென்னை (14 ஜூலை 2021): நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று (14.07.2021) தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாயை வழங்கினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கொங்கு நாடு குறித்த கேள்விக்கு, ”நல்லா இருக்கிற தமிழ்நாட்டைப் பிரிக்காதீர்கள். தற்போது நடைபெறும் ஸ்டாலினின் ஆட்சியைக் கலைஞர் இருந்து பார்த்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பார். அந்த அளவுக்கு ஆட்சி இருக்கிறது” என்றார். மேலும் ஸ்டாலின் ஆட்சி குறித்து பேசுகையில், ”உலகமே…

மேலும்...

வன்புணர்வு தில்லுமுல்லு – வசமாக மாட்டிக்கொண்ட பெண்!

பழனியில் வன்புணர்வு செய்யப்பட்டதாக புகார் அளித்த பெண் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்து மாட்டிக்கொண்டது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கேரளாவை சேர்ந்த 40 வயது பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக தமிழக காவல்துறை அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை கண்ணூர் தலசேரியில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரின் வாக்குமூலங்களை பதிவு செய்தது. திண்டுக்கல் கூடுதல் எஸ்.பி. சந்திரன் மற்றும் பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர்…

மேலும்...

நீட் தேர்வு ஆய்வறிக்கை என்ன சொல்கிறது? – நீதிபதி ஏ.கே ராஜன் விளக்கம்!

சென்னை (14 ஜூலை 2021): நீட் தேர்வு  ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி  ஏ.கே ராஜன் குழு இன்று சம்பர்ப்பித்தது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய கடந்த மாதம் 10-ம் தேதி நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கருத்துக்களை பெற்று அதுதொடர்பான அறிக்கையை தயார் செய்து இன்று அந்த அறிக்கை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு…

மேலும்...

சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை!

சென்னை (12 ஜூலை 2021): சென்னையில் நான்கரை மாதங்களுக்குப் பிறகு இன்று கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2 வது அலை தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தினசரி நோய் தொற்று ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த மே மாதம் தினசரி பாதிப்பு உச்சத்தை தொட்டு இருந்தது. மே 12-ந்தேதி அன்று அதிகபட்சமாக 7,564 பேருக்கு நோய்…

மேலும்...

பாஜக எல் முருகன் பதவி பறிப்பு – தொல். திருமாவளவன் பரபரப்பு தகவல்!

நாகை (12 ஜூலை 2021): பாஜக தலைமையால் எல்.முருகன் அவமதிக்கப்பட்டுள்ளார் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் அலுவலகம் திறப்பு, சிதம்பரம் அடுத்த புவனகிரியில் டாக்டர் அம்ப்தேகர் கைத்தறி பட்டு சொசைட்டி திறப்பு, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் அலுவலக திறப்பு ஆகியவற்றில் பங்கேற்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். இந்நிலையில் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பாஜக தலைவராக இருந்த எல். முருகனை நீக்கியது…

மேலும்...

ரஜினியின் மக்கள் மன்றம் கலைப்பு – நடிகர் ரஜினி பரபரப்பு தகவல்!

சென்னை (12 ஜூலை 2021): “அரசியலுக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம், முழுமையாக கலைக்கப்படுகிறது!” என நடிகர் ரஜினி இன்று அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்து தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) திட்டமிட்டிருந்தது. ஆனால் ‘உடல் நிலை ஒத்துழைக்காததால் அரசியலுக்கு வரப்போவதில்லை!’ என கடந்த தேர்தலுக்கு முன்பு ரஜினி அறிவித்தார். பின்பு அண்ணாத்தே படப்பிடிப்புக்கு போனார். பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி, தமது…

மேலும்...

பார்வையற்ற பெண்ணிற்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் சூப்பர் தீர்ப்பு!

சென்னை (11 ஜூலை 2021): பார்வையற்ற பெண் என்பதற்காக அவரது சாட்சியத்தை புறம்தள்ள முடியாது என்பதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளியின் சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், எம்.சி.ஏ. படித்து வந்துள்ளார். பார்வையற்றவர்களுக்கு சென்னை வில்லிவாக்கம் பள்ளி ஒன்றில் இலவசமாக சங்கீத பயிற்சி வழங்குவதை கேள்விப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் சென்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அன்புச்செல்வன்…

மேலும்...

புதிய ஆளுநர்கள் நியமனம் -குஷ்பு கொந்தளிப்பு !

சென்னை (07 ஜுலை 2021): எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு இதில் பாகுபாடு இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். எட்டு மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார். கர்நாடகா, ஹரியானா, திரிபுரா, இமாச்சல் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெலாட் தற்போது கர்நாடகா மாநில ஆளுநராக…

மேலும்...

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்!

புதுடெல்லி (07 ஜூலை 2021): தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்கிறார். இன்று மாலை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர்களாக 43 பேர் இன்று பதவியேற்க உள்ளதாக செய்தி வெளியானது. இன்று பதவியேற்க உள்ள அமைச்சர்கள் பிரதமர் இல்லத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் அமைச்சரவையில் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 43 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. அதில் தமிழக பாஜக தலைவர்…

மேலும்...
Durai Murugan

பாஜக எம்.எல்.ஏக்களை சந்தித்த துரைமுருகன் – நாங்க எல்லாரும் ஒன்றுதான் என்று பதில்!

புதுடெல்லி (07 ஜூலை 2021): டெல்லியில் அமைச்சர் துரைமுருகனை தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏக்கள் சந்தித்த நிலையில், “தமிழ்நாட்டைவிட்டு தாண்டினால் எல்லாம் ஒன்றுதான்” என தெரிவித்துள்ளார். அண்மையில் தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடக அரசு கட்டியிருந்த யார்கோல் அணை விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார். இது விவாதத்திற்குள்ளான நிலையில், நேற்று (06.07.2021) டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை…

மேலும்...