சிறுபான்மை வாக்குகளை இழந்ததால் தோல்வி – பாஜக மீது அதிமுக சரமாரி குற்றச்சாட்டு!

சென்னை (07 ஜூலை 2021): “பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்தது!” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதிமுக மீது பாஜகவும் கடும் விமர்சனம் வைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “அதிமுக ஆட்சி வர வேண்டும்…

மேலும்...

கல்யாணராமன் மீது நடவடிக்கை – போலீஸில் புகார் அளித்த விசிக!

சென்னை (07 ஜூலை 2021): தொல். திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை கமிஷனர் ஆபீசில் விசிக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. பாஜக கட்சியில் கல்யாணராமன் என்பவர், தொடர்ந்து வன்முறையைத் தூண்டி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசி, ஊடக வெளிச்சத்தில் எப்போதும் தன் பெயர் இருக்கும்படி சர்ச்சை செய்து வருபவர். சில மாதங்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து தரக்குறைவாகப்…

மேலும்...

ஆபாச யூடூயூப் பிரபலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

சென்னை (06 ஜூலை 2021): ஆன்லைன் விளையாட்டு மூலம் ஆபாசப் பேச்சு, பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் `பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு டிப்ஸ் தருவதாகக் கூறி அதற்கென யூட்யூப் சமூக வலைதளத்தில் தனக்கென ஒரு பிரத்யேக பக்கத்தை நிறுவி லட்சக்கணக்கான பின்தொடருவோரை கொண்டிருப்பவர் மதன். இவர் துணுக்குகள் தரும் ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, சிறார்கள் தரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இவரது அடைமொழி…

மேலும்...

அமைச்சரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட எல் முருகன்!

சென்னை (06 ஜூலை 2021): தடுப்பூசிகள் விவரத்தை வெள்ளை அறிக்கையாக கேட்ட எல் முருகனுக்கு வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அண்மையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பிரதமர் மோடியை சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எல்,முருகன், “தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக கோரிக்கை வைத்தோம். அதற்கு பிரதமர், தடுப்பூசி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் முன்கூட்டியே தடுப்பூசியும் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக அனைத்துத் தரவுகளும்…

மேலும்...

யூடியூப் வருமானத்தில் ரூ 10 லட்சம் கொரோனா நிதி – அசத்திய வில்லேஜ் குக்கிங் சேனல்!

சென்னை (05 ஜூலை 2021): யூடியூப் வருமானத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 10 லட்சம் கொரோனா நிதி வழங்கியுள்ளனர், வில்லேஜ் குக்கிங் சேனல். தமிழ் யூட்யூப் சமையல் சேனல்களில் முதல் முறையாக ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் சேனல் என்ற பெருமையை தற்போது வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றுள்ளது. இந்நிலையில், அந்த சேனலை சேர்ந்த குழுவினர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் தந்துள்ளனர். இதுகுறித்த செய்திகள் வெளியான சூழலில்,…

மேலும்...

பிரேமலதா முன்னாடி ஓட்ட கட்சி நிர்வாகிகள் பின்னால் ஓட – பரபரத்த போராட்டம்!

சென்னை (05 ஜூலை 2021): பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் நடத்தப பட்ட போராட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிள் ஒட்டியபடி கலந்துகொண்டார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்வதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். விலை உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் தமிழத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த 30ம் தேதி அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். அதன்படி இன்று (ஜூலை 5) பல்வேறு…

மேலும்...

எச்.ராஜா தோல்விக்கு யார் காரணம்? – உண்மையை போட்டுடைத்த பாஜகவினர்!

காரைக்குடி (05 ஜூலை 2021): கடந்த சட்டமன்ற தேர்தலில் எச்.ராஜாவின் தோல்விக்கு யார் காரணம்? என்பதை போட்டுடைத்துள்ளனர் பாஜக நிர்வாகிகள். கடந்த தேர்தலில் எச்.ராஜாவின் படுதோல்விக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளே காரணம் என்ற ஒரு புகாரை எச்.ராஜா தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் செலவுக்காக பாஜக தலைமை கொடுத்த ரூ 13 கோடி நிதியை எச் ராஜா சொந்த செலவுக்கு பயன்படுத்திவிட்டதாக பாஜக தலைமைக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் புகார் அனுப்பினர். இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று…

மேலும்...

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர் திடீர் மரணம்!

மதுரை (04 ஜூலை 2021): மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர், திடீரென மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புது விளாங்குடியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ சைமன். மென்பொருள் பொறியாளரான இவர், நேற்று முன்தினம் தனது மனைவியுடன் சென்று சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்டு கண்காணிப்பில் இருந்தபோது எந்த உடல் உபாதைகளும் ஏற்படாததால், ஆண்ட்ரூ சைமன் வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர்,…

மேலும்...

இறந்துட்டதா சொன்னாங்க ஆனால் இதயம் துடிக்குது – தேனி மருத்துவமனையில் பரபரப்பு!

தேனி (04 ஜூலை 2021): தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் குழந்தை உயிருடன் இருந்தது பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிளவேல்ராஜா-ஆரோக்யமெரி தம்பதியினருக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்திருக்கிறது. ஆறுமாத குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் தரப்பு இறப்பு சான்றிதழுடன் குழந்தையின் உடலையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளது. சான்றிதழுடன் குழந்தையை மயானத்திற்கு தூக்கிச் சென்ற போது குழந்தைக்கு…

மேலும்...

நடிகை கர்ப்பம் – முன்னாள் அதிமுக அமைச்சரின் செல்போனை ஆய்வு செய்ய போலீசார் முடிவு!

மதுரை (04 ஜூலை 2021): நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பமாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்ற அடையாறு தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய ஆவணமாக கருதப்படும் மணிகண்டனின் செல்ஃபோன் மதுரை கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில்…

மேலும்...