இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிப்பு!

இஸ்லமாபாத் (03 ஏப் 2022): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தை கலைக்க இம்ரான்கான் கோரிக்கை வைத்துள்ளார். பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. பாகிஸ்தானில் உள்ள 342 எம்.பிக்களில் 172 பேரின் ஆதரவை பெற்றால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலை இம்ரான் கானுக்கு உள்ளது….

மேலும்...

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

கொழும்பு (02 ஏப் 2022): இலங்கையில் அவசரநிலை பிரகடனத்தை அதிபர் கோத்பய ராஜபக்சே அறிவித்தார். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ெபட்ேரால் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி ேநரம் காத்துக்கிடக்கின்றனர். தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு உள்ளது….

மேலும்...

இலங்கையில் அதிபர் மாளிகை முற்றுகை; ஊரடங்கு அமல்..!

கொழும்பு (01 ஏப் 2022): இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களைக் கூட…

மேலும்...

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்தது!

இஸ்லாமாபாத் (30 மார்ச் 2022): இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் இன்று ராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சிக்கு ஆதரவளித்து வந்த முட்டாஹிதா குவாமி இயக்கம் கட்சி (MQM-P) ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ம்…

மேலும்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அபராதம்!

இஸ்லாமாபாத் (24 மார்ச் 2022): தேர்தல் விதிமீறல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தேர்தல் ஆணையம் ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் – பக்துன்கவா மாகாண உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு விதிகளை மீறியதாக இந்த அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் படி அரசுப்பணிகள் மேற்கொள்பவர்கள் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களைப் பார்வையிடக் கூடாது. ஆனால் இம்ரான்கான் அந்த விதிமுறையை மீறி பாகிஸ்தானின் கைபர் – பக்துன்கவா மாகாண மலக்கண்ட் அருகே ஸ்வாட் பகுதியில்…

மேலும்...

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

டோக்கியோ (17 மார்ச் 2022): ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் புதன்கிழமை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் இறந்துள்ளனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 7.3 ரிக்டர் அளவிலான நடுக்கம் ஜப்பானின் சில பகுதிகளில் மக்கள் நிற்க முடியாத அளவுக்கு வலிமையாக குலுங்கியது. இதன் தாக்கம் வியாழன் காலையும் இருந்தது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிட்டு வருவதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்திற்குப் பிறகு சுமார் 2 மில்லியன் வீடுகள் மின்சாரம்…

மேலும்...

உக்ரைன் மீதான போர் ஒரு குற்றச்செயல் – ரஷ்ய விமானி!

மாஸ்கோ (14 மார்ச் 2022): ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில், விமான பயணத்தின்போது “உக்ரைன் மீதான போர் குற்றச்செயல்” என்று பயணிகளிடம் விமானி ஒருவர் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை கண்டிக்கும் விமான ஒரு ரஷ்யர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பகைமையை உடனடியாக நிறுத்துமாறு விமானி அழைப்பு விடுப்பதாக வீடியோவில் உள்ளது. ‘: “உக்ரைனில் நடப்பது போர் ஒரு குற்றம். விவேகமுள்ள குடிமக்கள் என்னுடன் உடன்படுவார்கள் என்று நான்…

மேலும்...

இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

கராச்சி (09 மார்ச் 2022): 1999 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டெல்லி சென்ற IC-814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியவர்களில் ஒருவரான மிஸ்ட்ரி ஜாகூர் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி என கருதப்படும் மிஸ்ட்ரி ஜாகூர் இப்ராகிம் , மார்ச் 1 அன்று கராச்சியின் அக்தர் காலனியில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸின் IC-814 விமானம், 179 பயணிகள் மற்றும்…

மேலும்...

ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் அறிவிப்பு!

மாஸ்கோ (05 மார்ச் 2022): உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா 10வது நாளாக (மார்ச்.5 ) போர் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா இன்று காலை 11;30 மணி முதல் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் துறைமுக நகரமான மரியுபோல் உட்பட மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் வசிப்பவர்கள் வெளியேற உதவும் வகையில் இந்த போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அதேவேளை இந்த போர்…

மேலும்...

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்!

சைடோமிர் (02 மார்ச் 2022): உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷியப் படைகள் தாக்கியதில் இருவர் பலி யாகியுள்ளனர். மேலும் 16 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷியப் படைகள் முன்னேறி வருகின்றது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை…

மேலும்...