ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

Share this News:

டோக்கியோ (17 மார்ச் 2022): ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் புதன்கிழமை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் இறந்துள்ளனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

7.3 ரிக்டர் அளவிலான நடுக்கம் ஜப்பானின் சில பகுதிகளில் மக்கள் நிற்க முடியாத அளவுக்கு வலிமையாக குலுங்கியது. இதன் தாக்கம் வியாழன் காலையும் இருந்தது.

நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிட்டு வருவதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்திற்குப் பிறகு சுமார் 2 மில்லியன் வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தன; இரவு மீண்டும் மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், வியாழன் காலை சுமார் 30,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருந்தன. மேலும் 4,300 வீடுகள் தண்ணீர் இல்லாமல் இருந்தன.

டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் ஃபுகுஷிமா ஆலையில் உள்ள உலைகளின் நிலையை சோதித்து வருகிறது.

2011ஆம் ஆண்டில், இதே பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply