உக்ரைன், ரஷ்யா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

மாஸ்கோ (02 மார்ச் 2022): ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்த நிலையில், உக்ரைனும் அதற்கு சம்மதித்தது. இரு தரப்பிற்கும் இடையே…

மேலும்...

உக்ரைன் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமா?

மாஸ்கோ(28 பிப் 2022): அணு ஆயுத படையை தயார் நிலையில் வைத்திருக்க அதிபர் புடின் உத்தரவிட்ட நிலையில், அதற்கு ஐ.நா, நேட்டோ, சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே அடுத்த 24 மணி நேரம் குறித்து உக்ரைன் அதிபர், இங்கிலாந்து அதிபரிடம் பேசியிருப்பது பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படைகளின் தாக்குதல் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 14 குழந்தைகள் உட்பட 352 பேர்…

மேலும்...

ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – ஒப்புக்கொண்ட ரஷ்யா!

மாஸ்கோ (28 பிப் 2022): உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது. உக்ரைன் தெரிவித்த இந்தப் பலி எண்ணிக்கை குறித்து ரஷ்யா…

மேலும்...

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க 27 நாடுகள் ஒப்புதல்!

பாரிஸ்(26 பிப் 2022): உக்ரைனுக்கு 27 நாடுகள் ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. ரஷ்யா, உக்ரைன் மீது நடத்திவரும் தாக்குதலால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டும் வெளியேறி வருகின்றன. இந்தசூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடலிருந்தும், வான்வெளியாகவும் ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தீவிரபடுத்தி வரும் ரஷ்யா, கீவில் உள்ள கீவ் நீர்மின் நிலையத்தையும், மெலிடோபோல் நகரையும் கைப்பற்றியுள்ளதாக…

மேலும்...

ரஷ்யாவுக்கு எதிராக உலகெங்கும் வலுக்கும் போராட்டம்!

அர்ஜென்டினா (26 பிப் 2022): உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து உலக அளவில் போராட்டம் வெடித்துள்ளது. அர்ஜென்டினாவில் அதிக அளவிலான உக்ரைனிய மக்கள் வாழும் நிலையில், தங்கள் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள ரஷ்ய தூதரகம் நோக்கி நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர். ரஷ்யாவை கண்டித்தும், போரை நிறுத்துமாறும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திச்சென்றனர். உக்ரைனில் உள்ள தங்கள் உறவினர்களின் நிலை குறித்து போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்….

மேலும்...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – முக்கிய நகரங்கள் மீது குண்டு மழை!

மாஸ்கோ (24 பிப் 2022): உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அதிபர்…

மேலும்...

ஹிஜாபுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்!

சியாட்டில் (21 பிப் 2022): கர்நாடகாவில் சர்ச்சையை கிளம்பியுள்ள ஹிஜாப் தடை விவகாரம் நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது ஹிஜாபுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சியாட்டில், டெக்சாஸ், மாசசூசெட்ஸ், இல்லினாய்ஸ், வட கரோலினா, மிச்சிகன், நியூயார்க் மாநிலம், நியூ ஜெர்சி, புளோரிடா மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள இந்திய அமெரிக்கர்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக, கர்நாடகாவில் உள்ள ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகளில் ஹிஜாப்…

மேலும்...

இம்ரான் கான் பதவிக்கு ஆபத்து – பாகிஸ்தானில் பரபரப்பு!

இஸ்லாமாபாத் (14 பிப் 2022): பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதால், அவரது பதவிக்கு ஆபத்து முற்றியுள்ளது. லாகூரில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், நவாஸ் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது, அவருக்கு அடுத்ததாக பிரதமராக யாரை முன்னிறுத்துவது என்பன உள்ளிட்ட முக்கிய விஷயங்களை விவாதிக்க…

மேலும்...

கனடாவில் போராட்டம் தீவிரம் – ரகசிய இடத்தில் பிரதமர்!

டொராண்டோ (30 ஜன 2022): கனடா அரசின் கட்டாய தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட கோவிட் விதிகளுக்கு எதிராக தலைநகரில் நடைபெறும் போராட்டம் திவரமடைந்துள்ளது. கனடாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. அதில் தடுப்பூசி கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கோவிட் விதிமுறைகளை நீக்க வலியுறுத்தி பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் திரண்டனர். சிறுவர்கள், பெரியவர்கள்,…

மேலும்...

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்!

நியூயார்க் (30 ஜன 2022): அமெரிக்காவில் பெய்துவரும் பனிப்புயலையொட்டி அங்குள்ள சில மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நியூயார்க் மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 1,17,000 வீடுகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கப்படவில்லை. கடலோரப் பகுதிகளில் ஒரு அடி உயரம் பனிப்பொழிவு காணப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனியை அகற்றும்…

மேலும்...