சியாட்டில் (21 பிப் 2022): கர்நாடகாவில் சர்ச்சையை கிளம்பியுள்ள ஹிஜாப் தடை விவகாரம் நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது ஹிஜாபுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் சியாட்டில், டெக்சாஸ், மாசசூசெட்ஸ், இல்லினாய்ஸ், வட கரோலினா, மிச்சிகன், நியூயார்க் மாநிலம், நியூ ஜெர்சி, புளோரிடா மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள இந்திய அமெரிக்கர்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக, கர்நாடகாவில் உள்ள ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகளில் ஹிஜாப் தடைக்கு எதிராக 15 நகரங்கள் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.