பிரபல நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!

Share this News:

சென்னை (16 ஜன 2020): சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சின்னத்திரை தம்பதி ஜெயஸ்ரீ – ஈஸ்வர் குடும்பப் பிரச்னை வீதிக்கு வந்தது. ஈஸ்வர் மகாலட்சுமி என்ற நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஜெயஸ்ரீ மீடியாக்களில் பேட்டியளித்ததும் இவ்விவகாரம் மேலும் பற்றி எரிந்தது.

இந்நிலையில் ஜெயஸ்ரீயின் புகாரை அடுத்து போலீசார் ஈஸ்வரை கைது செய்தனர். ஆனால் பின்பு அவர் ஜாமீனில் வெளியானதை அடுத்து ஜெயஸ்ரீ மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார். மேலும் ஈஸ்வர்-மகாலட்சுமி சேர்ந்து நடிச்சிட்டுவந்த `தேவதையைக் கண்டேன்’ சீரியலும் முடிவுக்கு வந்துவிடும் என ஜெயஸ்ரீ நம்பினார். ஆனால், டிசம்பர் இறுதி வாரத்துடன் முடியப் போவதாகச் சொல்லப்பட்ட தொடரை மறுபடியும் நீட்டித்துவிட்டனர். இதனால், ஜெயஸ்ரீ மேலும் அப்செட் ஆகிவிட்டார்.

மேலும் ஈஸ்வர் வாங்கின சில கடன்களுக்காகக் கடன் கொடுத்தவங்க, ஜெயஸ்ரீயைத் தேடி வரத் தொடங்கினர். இதனால ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தார் இதில், விரக்தியின் உச்சத்துக்குப் போய் தூக்க மாத்திரைகளைப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் சரியான நேரத்தில் அவரது நண்அர்கள் மருத்துமனைக்கு கொண்டு சென்று ஜெயஸ்ரீயை காப்பாற்றியுள்ளனர்.


Share this News:

Leave a Reply