கொச்சி (21 ஜன 2020): நடிகை அமலாபால் தந்தை பால் வர்கீஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
பால் வர்கீஸ் (61) கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமலாபால் மலையாளத்தில் நீலதாமரை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
பால் வர்கீஸின் இறுதிச் சடங்கு கேரள மாநிலம் குறுப்பம்பாடி சர்ச் மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெறும்.