நடிகைகளை வைத்து பிழைப்பு நடத்துபவன்தானே நீ – சினிமா மேடையில் நடந்த அசிங்கம்!

Share this News:

சென்னை (14 டிச 2022): தமிழ் சினிமாவில் பல முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கியுள்ளவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பயில்வான் மோசமாக பேசுவதாக சர்ச்சைகளை எழுவது வழக்கம். இவருக்கு எதிராக திரைத்துரையில் இருந்தும் பல எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. அதில் முக்கியமானவர் தயாரிப்பாளர் கே. ராஜன். தற்போது சினிமா சம்பந்தமான விழாக்களில் கலந்து கொள்ளும் இவர், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிந்த வந்த கே. ராஜன், மீனா கணவரின் இறப்பு குறித்து பயில்வான் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டனர்.

இந்நிலையில் ‘கட்சிக்காரன்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் ராஜன் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, குறுக்கிட்ட ரங்கநாதன் தன்னை தகாத வார்த்தையால் ராஜன் பேசியதாக கூறினார்.

உடனே ராஜன், ‘உங்களுக்கு பதில் சொல்ல நான் இங்கு வரவில்லை. உனக்கு பதில் சொல்ற இடம் இது இல்ல. வா தனியா பேட்டி வச்சுக்கலாம். ரெண்டு பேரும் பேட்டி வச்சுக்கலாம். அங்க வாங்க. இந்த மேடை தயாரிப்பாளர் போட்ட மேடை. எல்லாமே ஓசிக்கு வேண்டாம். உன்னையப் பத்தி எப்போ பேசினேன்? நீ ஒவ்வொரு தாய்மார்களையும் கேவலப்படுத்திட்டு இருக்க.

ஒவ்வொரு நடிகைகள கேவலப்படுத்திட்டு இருக்க. பெட்ரூம் பத்தியே பேசுற. இந்த மிரட்டல் எல்லாம் வேற ஆளுக்கிட்ட வச்சுக்க’ என்று கூறினார். இதனால் கே. ராஜனுக்கும், பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது. கடைசியாக அங்கிருந்தவர்கள் ரங்கநாதனை சமாதனப்படுத்தி வெளியில் அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சி மேடையிலே கே. ராஜனும், பயில்வானும் மோதிக்கொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை கிளப்பி வருகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *