துபாய் (14 டிச 2022): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசிட் விசாவில் இருப்பவர்கள் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க நாட்டை விட்டு வெளியேறி பின்னரே விசாவை புதுப்பிக்க வேண்டும்; இந்த நடைமுறை ஷார்ஜா மற்றும் அபுதாபி எமிரேட்டுகளுக்கு பொருந்தும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசிட்விசாவில் இருப்பவர்களுக்கு நாட்டிற்குள்ளிருந்து விசாவை மாற்றும் வசதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஷார்ஜா மற்றும் அபுதாபி எமிரேட்டுகளில் அமலுக்கு வந்தது. ஆனால் துபாயில் தற்போதைய நிலையே தொடரும்.
புதிய முடிவின் மூலம், உங்கள் விசாவை புதுப்பிக்கவோ அல்லது வேறு விசாவிற்கு மாறவோ விரும்பினால், நீங்கள் நாட்டை விட்டு வெளியேறி விசாவை புதுப்பிக்க வேண்டும். ஆனால் துபாயில் புதிய உத்தரவு அமலுக்கு வரவில்லை.
ஏற்கனவே விசிட் விசாவில் இருப்பவர்கள் கூடுதல் தொகை செலுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தங்கள் விசாக்களை புதுப்பித்தனர். இது வெளிநாட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த முறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
விமானம் அல்லது பேருந்தில் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு சென்ற பிறகு விசாக்களை புதுப்பிக்க வேண்டும்.