மும்பை (09 ஜன 2020): நடிகை தீபிகா படுகோன் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இந்தி முன்னணி நடிகை தீபிகா படுகோன் போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தீபிகா படுகோன் நடித்த படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் தாஜேந்தர் பால் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜக எதை எதிர்த்தாலும் அது விளம்பரமாக அமைந்து எதிர் தரப்புக்கு சாதகமாக அமைந்ததே வரலாறு.