புதுடெல்லி (03 டிச 2022): பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியிடம் ED விசாரணை நடத்தியது.
இதனிடையே சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பரிசு பெற்றதாக வெளியான தகவலை நடிகை மறுத்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி கறுப்புப் பண வழக்கில் நடிகை நோரா ஃபதேஹி மீதான மூன்றாவது வழக்கு இதுவாகும்.
நோரா ஃபதே மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் ஆடம்பர கார்கள் மற்றும் பிற விலையுயர்ந்த பரிசுகளை சந்திரசேகரிடமிருந்து பெற்றனர் இருவர் மீதும் குற்றச்சாட்டு இருந்து வருகின்றன. மேலும் சுகேஷுடனான உறவு, வாட்ஸ்அப் உரையாடல்கள் போன்றவை குறித்து அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியது.
இதற்கிடையில் விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகை தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். முன்னதாக, இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது அமலாக்கத்துறையின் நிதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.