சென்னை (15 டிச 2022): விஜய் டிவியின் சீரியல் பிரபலம் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இயக்குனராக இருந்த தாய் செல்வம் தற்போது திடீரென மரணமடைந்திருக்கிறார்.
இவருடைய மரணம் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிரபலங்கள் பலருக்கும் இந்த செய்தி ஏற்க முடியாத ஒரு சோகமாக தான் இருந்து வருகிறது என பல சின்னத்திரை பிரபலங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஈரமான ரோஜாவே மட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா நடித்த நியூட்டனின் மூன்றாம் விதி என்ற திரைப்படத்தின் இயக்குனராகவும் தாய் செல்வம் தான் இருந்திருக்கிறார்.