சென்னை (27 ஜூன் 2020): பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். அவரது சேவையை அங்கீகரித்து அமெரிக்காவின் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் திவ்யாவுக்கு டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது.
இதுபற்றி திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் செல்வின் குமாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் புத்திசாலி மாணவி இல்லை. ஆனால் கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான் சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார். தமிழ் நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்க உள்ளேன். இவ்வாறு திவ்யா கூறி உள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவில் டாக்டர் பட்டம் வழங்குவதற்காக நடைபெறவிருந்த இவிழா, கோவிட் 19 காரணமாகத் தள்ளிவைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.