சென்னை (08 ஜூலை 222): நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு இல்லை, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அவரின் மேலாளர் தெரிவித்துள்ளார்
விக்ரமுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனை விக்ரமின் மேலாளர் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛விக்ரமிற்கு லேசாக நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து கொண்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். தற்போது விக்ரம் நலமாக உள்ளார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். தவறான தகவல்களுக்கு இந்த விளக்கம் முற்றுப்புள்ளி வைக்கும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.