ஆவலோடு இருந்து ஏமாற்றம் அடைந்த ரஜினி ரசிகர்கள்!

Share this News:

சென்னை (12 டிச 2020): ரஜினி வீட்டின் வாசலில் காத்திருந்து ரஜினி வீட்டில் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். நடிகர் ரஜினிக்கு இன்று 70 வது பிறந்தநாள். ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டங்களை உறுதியாக அறிவித்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது.

ரஜினிகாத்துக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் ரஜினி ரசிகர்கள் குவிந்ததால் வீட்டின் முன்பு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதனால், டுவிட்டரில் #HappyBirthdayRajinikanth என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இன்று ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்ல அவரது போயஸ் தோட்ட இல்ல வீடு முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். சில ரசிகர்கள் ரஜினிகாந்தின் பாட்ஷா, அருணாச்சலம், சிட்டி, பாபா, போன்ற படங்களின் கெட்டப்புகளில் வாழ்த்து சொல்ல வந்து இருந்தனர். ஆனால் ரஜினிகாந்த் வீட்டில் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Share this News:

Leave a Reply