மகளுக்கு காதல் கல்யாணமா? – நடிகர் ராஜ்கிரண் விளக்கம்!

Share this News:

சென்னை (08 செப் 2022): நடிகர் ராஜ்கிரணின் மகள் டிவி சீரியல் நடிகரை காதல் கல்யாணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து ராஜ்கிரண் விளக்கம் அளித்துள்ளார்.

சன் டிவி நாதஸ்வரம் சீரியல் புகழ் முனீஸ்ராஜாவுடன் ராஜ்கிரண் மக்களுக்கு காதல் திருமணம் நடைப்பெற்று இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. நாதஸ்வரம் சீரியலில் சம்பந்தம் என்ற ரோலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார் நடிகர் முனீஸ்ராஜா. இவர், விரும்பாண்டி புகழ் நடிகர் சண்முகராஜனின் சகோதரர் ஆவார்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராஜ்கிரண், “என் மக்களுக்கு காதல் திருமணம் நடைபெற்றதாக தவறான தகவல் பரவுகிறது. எனக்கு திப்பு சுல்தான் என்கிற நயினார் முஹம்மது என்கிற மகன் மட்டுமே உண்டு. வேறு எந்த பிள்ளையும் இல்லை. வேறு மதத்தை சேர்ந்த பிரியா என்பவரை நான் வளர்த்து வந்தேன். அவர் மனம் நோக்கக்கூடாது என்பதற்காக அவரை வளர்ப்பு மகள் என வெளியில் சொல்லவில்லை.

தற்போது அவர் காதலித்தாக கூறப்படும் முனீஸ்ராஜா, மிகவும் மோசமானவர்,காசுக்காகவும் எனது பிரபலத்தை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காகவும் பிரியாவை காதலித்து வந்துள்ளார்.இதனை என் மகளிடம் கூறியும் அவர் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எனக்கும் பிரியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. தற்போது அவருக்கு திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ” என தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply