மும்பை (30 ஏப் 2020): புற்று நோய் பாதிப்பு காரணமாக பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் சம்பந்தமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் சிகிச்சை பெற்று 2019-ம் ஆண்டு நாடு திரும்பினார்.
இந்நிலையில்நேற்று இரவு இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடல் சோர்வடைந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் மும்பை எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு புற்றுநோய் சம்பந்தமான நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் ரிஷி கபூருக்கு சிகிச்சைஅளித்து வருவதாக அவரது மனைவி நீத்து கபூர் தெரிவித்துள்ளார்.