நடிகர் சல்மான்கான் தினக் கூலிகளுக்கு செய்த பிரமிக்க வைக்கும் உதவி!

Share this News:

மும்பை (09 ஏப் 2020): இந்தி நடிகர் சல்மான் கான் தினக் கூலிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ 3000 வழங்கி உதவி புரிந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு நாடெங்கும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தவிர தினக்கூலிகள் அதிக அளவில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தினக்கூலிகள் 25000 பேருக்கு தலா ரூ 3000 வீதம் வழங்கி பெரும் உதவி புரிந்துள்ளார். இவற்றை ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கிற்கே நேரடியாக அனுப்பியுள்ளார். இந்த பேருதவிக்காக நடிகர் சல்மான் கானுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவிலேயே அதிக அளவில் பாதிப்படைந்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply