மும்பை (11 ஆக 2020):பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்-துக்கு நுரையீரல் புற்று நோய் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாக அவருடைய ட்விட்டர் செய்தியை மேற்கோள் காட்டி பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அவர் சில காலம் சிறைத் தண்டனை அனபவித்து வந்தார். 80,90-களில் இந்தித் திரையலகில் குறிப்பிடத்தக்க வகையில் பிரபல்யமடைந்திருந்த இவர் புகழ் பெற்ற இந்தி திரையுலக ஜாம்பவான்களான நர்கிஸ்-சுனில் தத் தம்பதியினரின் மகன் ஆவார்.
இந்தி திரையுலம் இவரை செல்லமாக பாபா என்று அழைப்பது உண்டு! அண்மையில் இவருடைய ஆஜானுபாகுவ உடற்கட்டுடன் கூடிய கே.ஜி.எஃப். – 2 சினிமா முதல் பார்வை போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருந்தன.