பெஷாவர் (29 ஜன 2020): நடிகர் ஷாருக்கானின் உறவினர் பாகிஸ்தான் பெஷாவரில் காலமானார்.
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான். அவரது உறவினர் நூர்ஜஹான் பாகிஸ்தான் பெஷாவரில் வசித்து வந்தார். இந்நிலையில் புற்று நோய் காரணமாக அவர் பாகிஸ்தான் பெஷாவரில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை நூர்ஜஹானின் சகோதரர் மன்சூர் அஹமது உறுதிபடுத்தியுள்ளார்.
ஷாருக்கானுடன் நூர்ஜஹான் குடும்பத்தினர் தொடர்பிலேயே இருந்துள்ளனர். இந்நிலையில் நூர்ஜஹானின் இறுதிச் சடங்கிற்கு ஷாருக்கான் பாகிஸ்தான் செல்லக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நூர்ஜஹான் பாகிஸ்தானில் அரசியலில் மிகுந்த ஆர்வம் மிக்கவராகவும், மாவட்ட அளவிலான தேர்தலில் 2018 ஆம் ஆண்டு போட்டியிட விரும்பி கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.