சென்னை (27 ஜன 2022): தனுஷும், அவரின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
பிள்ளைகள் வளர்ந்த உடன் பிரிவது என்று ஏற்கனவே பேசி முடிவு செய்து வைத்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க குடும்பத்தார் தவிர்த்து நண்பர்களும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் இருக்கும் தனுஷுக்கு போன் செய்து பேசியிருக்கிறார் சிம்பு. நண்பா விவாகரத்து எல்லாம் வேண்டாம், ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என்று அறிவுரை வழங்கினாராம்.
சிம்பு செய்த காரியம் குறித்து அறிந்த ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர். என்ன தான் தொழில் ரீதியாக தனுஷுடன் போட்டி இருந்தாலும், அவர் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அந்த மனசு தான் சார் கடவுள் என்கிறார்கள் ரசிகர்கள்.