போதை விருந்தில் சிக்கிய சூப்பர் ஸ்டாரின் தம்பி மகள்!

Share this News:

ஐதராபாத் (04 ஏப் 2022): ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகள், உட்பட 144 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் ராடிசன் என்ற பெயரில் தனியார் 5 நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நள்ளிரவு ஒரு மணி வரை மது விருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ராடிசன் ஹோட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஜோயல் டேவிஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஏராளமானோர் ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கு போதை விருந்தில் கலந்து கொண்ட 148 பேரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆந்திரா மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தம்பி நாக பாபுவின் மகள் நிகாரிகா, திரைப்பட பாடகர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்ரி மகள், ஆந்திரா முன்னாள் டி.ஜி.பி மகள் மற்றும் முன்னாள் எம்.பியின் மகன் என விஐபியின் பிள்ளைகள் கலந்து கொண்டது தெரியவந்தது.

இவர்களுக்கு அந்த ஓட்டலில் பிரவுன் சுகர், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதற்காக 5 பாக்கெட்டுகளில் வைத்திருந்த 12 கிராம் எடையுள்ள கொகைன் பறிமுதல் செய்தனர்.

போலீசாரிடம் சிக்கிய நடிகை நிகாரிகா ஏராளமான தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடித்துள்ளார். தமிழில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த போதை விருந்தில் 38 வி.ஐ.பி.க்களின் மகள்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி விட்டு மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் அழைக்கும்போது வரவேண்டுமென அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக ஹோட்டல் மேனேஜர்கள் அனில்குமார் ( 35 ), அபிஷேக் (39) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சாரா ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply