பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் மதுபான கடையில் மது வாங்கி வருவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உரடங்கு சமயத்தில் நடிகைகள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடைகளில் மது வாங்குவது தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது.
இதனை ட்விட்டரில் பகிர்ந்த ரகுல் அது குறித்து பதிலளித்துள்ளார் , “மருந்து கடைகளில் மதுபானம் விற்கப்படும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை” என்று வேடிக்கையாக கூறியுள்ளார். ரகுல் பிரீத் சிங்கிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.
Oh wow ! I wasn’t aware that medical stores were selling alcohol 🤔😂😂 https://t.co/3PLYDvtKr0
— Rakul Singh (@Rakulpreet) May 7, 2020