எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 12- வீடியோ!

Share this News:

ஹலீமாவை பிடிக்க நினைக்கும் குர்தேகாக்லு! அதிர்ச்சி தந்த குண்டோக்டு!



240p Mobile Version For Download Click Here

ரடோய்கர் கொலை செய்த ஆல்ப்களுக்குப் பிரார்த்தனை நடத்துவதிலிருந்து இப்பகுதி தொடங்குகிறது. உடல் புதைக்கப்படும் இடத்தில் பிரார்த்தனையில் பெண்களும் கலந்து கொள்கிறார்கள்.

காயி கூடாரத்துக்கு எதிராக சதி செய்து, வியாபாரக் கேரவனைக் கொள்ளையடித்ததோடு பல ஆல்ப்களையும் படுகொலை செய்த கரடோய்கருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது. டெம்ப்ளர்களுடன் இணைந்து சதி செய்ததால், கரடோய்கரைச் சுல்தான் அலாவுதீனிடம் அனுப்பி வைத்து தலைநகரில் தண்டனை பெற வைப்பதுதான் சரி என சுலைமான் ஷா வாதிக்கிறார். ஆரம்பத்தில் எதிர்ப்பு வந்திருந்தாலும் அவரின் கருத்தை அனைவரும் ஏற்றுகொள்கிறனர். அதன் அடிப்படிடையில், இராணுவ தலைமை அதிகாரி ஸரி போலுவின் பாதுகாப்பில் கரடோய்கரை கொன்யாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

எல் அஜீஸ் காயி கோத்திரத்தினருக்கு வழங்கிய நிலம் தொடர்பான சம்மதக் கடிதத்துடன் அலெப்போவுக்குச் செல்லும் பொறுப்பைத் திடீரென குண்டோக்டுவிடம் ஒப்படைக்கிறார் சுலைமான் ஷா. அனைவரும் அதிர்ச்சியாக நிற்கையில், எர்துருல் தம் தந்தையிடம் தாம் செல்வது குறித்துக் கேட்க முனைகிறார். அந்நேரம் சுலைமான் ஷா மயங்கி விழுகிறார். அவரின் உடல்நிலை மோசமாகிறது. எனினும் காயி கோத்திரத்தினர் அலெப்போவுக்குக் குடிபெயர்வதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி அன்னை ஹைம் உத்தரவிடுகிறார்.

கொன்யாவுக்கு கரடோய்கரைக் கொண்டு செல்லும் வழியில், குர்தோக்லு கொடுத்த தகவல்படி காத்திருந்து தாக்குதல் நடத்தி அவரை விடுவிக்கிறான் டைட்டஸ். ஸரி போலுவைக் கரடோய்கர் கொல்கிறான். கொன்யாவுக்கு அழைத்து வந்துகொண்டிருந்த இளவரசர்களை காயி-கள் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதாகவும் சுல்தான் அலாவுதீனுக்கு எதிராக ஆட்சியைப் பிடிக்க காயி-கள் இளவரசர் நுஃமானுடன் சேர்ந்து பிற துருக்கி கோத்திரத்தினர்களை ஒன்றிணைப்பதாகவும் இதனைக் கூற வந்த தம்மீது தாக்குதல் நடத்தி வீரர்கள் அனைவரையும் காயி-கள் கொன்றுவிட்டதாகவும் அதில், முக்கிய இராணுவ தளபதி ஸரி போலுவும் கொல்லப்பட்டதாகவும் சுல்தான் அலாவுதீனிடம் கூற கரடோய்கரிடம் டைட்டஸ் ஆலோசனை கூறுகிறான். இதனால், கோபம் கொள்ளும் சுல்தானிடமிருந்து படைகளைப் பெற்று திரும்ப வந்து காயி-களை மொத்தமாக அழிப்பது அவர்கள் திட்டம்.

அலெப்போவுக்குச் செல்வது குண்டோக்டு என்றும் அங்கே தம்மை அழைத்துச் செல்வது எர்துருல் அல்ல என்பதும் அறியும் ஹலீமா அதிர்ச்சியடைகிறார். எர்துருலால் காப்பாற்றி கொண்டு வரப்பட்டவர்கள் செல்ஜுக் இளவரசர்கள் என்ற தகவலை செல்சான், குர்தோக்லுவிடம் தெரிவிக்கிறார்.

எர்துருலின் சகோதரர் துந்தரும் இளவரசர் யிகிட்டும் ஆற்றங்கரையில் பேசிகொண்டிருந்து திரும்பும் வேளையில், கொல்லப்பட்ட பேபோராவின் உடலைக் கண்டு அதிர்ச்சியாகி கூடாரத்துக்கு ஓடுகின்றனர். ஆட்டு மந்தையில் ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதை அக்ககோகா கண்டுபிடிக்கிறார்.

நாஸிரைச் சந்திக்கும் மாஸ்டர் பெட்ருசியோ, காயி கூடாரத்தில் ப்ளேக் நோய் பரவியுள்ளது என்பதை எல் அஜீஸிடம் கூறி அவர்களுக்குக் கொடுத்த நிலத்தை ரத்து செய்ய ஆலோசனை கூறுகிறார். அதன்படி எல் அஜீஸைச் சந்தித்து காயி-களுக்கு ப்ளேக் தொற்றியுள்ளதாக பீதி கிளப்புகிறார் நாஸிர். அதிர்ச்சியாகும் எல் அஜீஸ், காயி-களுக்குக் கொடுத்த நிலத்தை அவர்களுக்கு வழங்கக்கூடாது எனவும் எர்துருல் வந்தால் தம்மைச் சந்திக்கக் கூறும்படியும் உத்தரவிடுகிறார்.

சுலைமான் ஷா உத்தரவின்படி அலெப்போ செல்லத் தயாராகும் குண்டோகுவைத் தம் வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார் குர்தோக்லு. எர்துருலால் காப்பாற்றி கொண்டு வரப்பட்டவர்கள் செல்ஜுக் இளவரசர்கள் என்றும், அவர்களை இரவோடு இரவாகக் கடத்தி சுல்தான் அலாவுதீடம் ஒப்படைத்து விட்டால் காயி கோத்திரத்துக்கு செல்ஜுக் அரசின் கீழேயே பாதுகாப்பாக சிறந்த நிலம் கிடைக்குமெனவும் அலெப்போ காயி-களுக்குப் பெரும் ஆபத்தாக இருக்குமெனவும் கூறி, இதெல்லாம் வயதானதால் சுலைமான் ஷா புரியும் நிலையில் இல்லை எனவும் குண்டோகு அடுத்த பேயாக தைரியமாக முன்வர வேண்டுமெனவும் ஏற்றி விடுகிறார். தாம் செல்சானிடம் கூறிய விசயம் குர்தோக்லுவுக்கு எப்படி தெரிந்தது என குண்டோக்டுவுக்குச் சந்தேகம் வருகிறது.

இரவு ஹலீமாவையும் இளவரசர்களையும் அவர்களின் கூடாரத்தின் மீது தாக்குதல் நடத்திக் கடத்திச் செல்வதற்கு குர்தோக்லு, அல்பர்குவுடன் சேர்ந்து தயாராகிறார். கூடாரத்தைச் சுற்றுவளைத்து உள்ளே நுழையும்போது, அங்கே ஹலீமாவும் அவர் தந்தையும் இல்லாததோடு அங்கு குண்டோக்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் விக்கித்து நிற்கிறார்.

குர்தோக்லுவின் பேச்சால் சந்தேகம் கொண்டு குண்டோக்டு, அலெப்போவுக்கு ஹலீமாவையும் இளவரசர்களையும் எர்துருலுடன் அனுப்பி வைத்துவிடுகிறார். எர்துருல் செல்வதை டைட்டஸ் கவனித்துவிடுகிறான். எர்துருலின் பின்னால், அவர்களைத் தாக்கி ஹலீமாவையும் இளவரசர்களையும் பிடிப்பதற்கு ஆட்களை அனுப்பி வைக்கிறார் குர்தோக்லு.

அலெப்போ செல்லும் வழியில், டைட்டஸ் மற்றும் குர்தோக்லுவின் ஆட்களால் எர்துருலுக்கு என்ன நேர்ந்தது; காயி கூடாரத்தில் ஆட்டு மந்தைகளுக்குப் பரவிய நோயால் காயி கூடாரத்தின் நிலைமை என்ன ஆனது; காயிகளுக்கு நிலம் கொடுப்பதை ரத்து செய்த எல் அஜீஸின் முடிவு தெரியாமல் அலெப்போ புறப்பட்டுள்ள எர்துருல் அலெப்போ சென்று சேர்ந்த பின் என்ன நடக்கும் முதலான கேள்விகளுடன் இப்பகுதி முடிவடைகிறது.

தொடரும்..

எர்துருல் சீசன் 1 தொடர் 11


Share this News:

Leave a Reply