அண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ!

Share this News:

சென்னை (08 ஆக 2020): திமுகவை சேர்ந்தவர்கள் மற்ற கட்சிக்காரங்களை சந்திக்கக் கூடாது என்றா எந்த விதியும் இல்லை என்று என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

“பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்தது தொடர்பான விவகாரத்தில் பதிலளிக்கும் முன்னரே கட்சியில் இருந்து நீக்கியிருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே தங்களின் தற்காலிக நீக்கத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

திமுகவைச் சேர்ந்தவர்கள் மற்ற கட்சி தொண்டர்களையும் தலைவர்களையும் சந்திக்கக் கூடாதென்று எங்கும் குறிப்பிடவில்லை எனவும் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதுதான் பேரறிஞர் அண்ணாவின் கோட்பாடு .

முன்னாள் முதல்வர் கருணாநிதியை பாஜகவைச் சேர்ந்த பிரதமர் நேரில் வந்து பார்த்தது அனைவருக்கும் தெரியும். கட்சியின் மாண்பை நான் மீறியதாகக் கூறுவது சரியல்ல. இது தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கத் தாயாராக இருப்பதாகவும் கு.க. செல்வம் தெரிவித்துள்ளார்.”

இவ்வறு குக செல்வம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply