மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை!

Share this News:

போபால் (26 நவ 2020): மதம் மாறி திருமணம் செய்துகொண்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் வகையில் மத்திய பிரதேச பாஜக அரசு சட்ட மசோதா கொண்டுவந்துள்ளது.

லவ் ஜிஹாத்தை தடுக்கும் நடவடிக்கையாக இந்த மசோதாவை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்துகிறது இந்த மசோதாவின் கீழ், மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி மதம் மாறியவர்கள் திருமணம் செய்வது தண்டனைக்குரியது. இந்த மசோதா டிசம்பர் 28 ம் தேதி சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்திற்கு ‘தர்ம சுதந்திர சுதந்திர மசோதா’ என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, மதம் மாறியவர்கள் திருமணத்திற்கு முன்பு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே கலெக்டருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். மீறுபவர்கள் கைது செய்யயப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது. . இதற்காக உதவும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்று இத மசோதா கூறுகிறது.

கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு சட்டம் அமல்படுத்தியதை அடுத்து மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இதே போன்ற சட்டங்களை கொண்டு வரவுள்ளதாக பாஜக தலைமையிலான கர்நாடகா, ஹரியானா அரசுகளும் அறிவித்துள்ளன.


Share this News:

Leave a Reply