இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸால் 101 பேர் பாதிப்பு!

Share this News:

புதுடெல்லி (17 டிச 2021): இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவின் புதிய வகை ஒமிக்ரான் 90க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

அந்தவகையில் இந்தியாவில் இதுவரை 11 மாநிலங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32, டெல்லியில் 22, ராஜஸ்தானில் 17, கர்நாடகாவில் 8, தெலங்கானாவில் 8, குஜராத்தில் 5, கேரளாவில் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், தமிழகம், ஆந்திரா, மேற்குவங்கம், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply