புதுடெல்லி (25 பிப் 2020): பற்றி எரியும் டெல்லியில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 180 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
144 தடை உத்தரவு உள்ளபோதிலும் நிலமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் திணறுகிறது டெல்லி போலீஸ்.
இதற்கிடையே வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது..