டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு – மேலும் அதிகரிக்கும் அபாயம்!

Share this News:

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து கலவரம் மூண்டுள்ளது.

இந்த வன்முறையில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 180 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை வரை 13 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply