புதுடெல்லி (23 ஜூன் 2021): கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்கள் 95 சதவீதமும் கோவிட் இறப்புகளை தவிர்க்கலாம் என்று ஐசிஎம்ஆர்) வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின்படி முதல் டோஸ் 82 சதவீதமும், இரண்டாவது டோஸ் 95 சதவீதமும் கோவிட் உயிரிழப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரியவந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (என்ஐஇ) இணைந்து, ‛தமிழகத்தில் அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே இறப்புகளைத் தடுப்பதில் கோவிட் தடுப்பூசி செயல்திறன்’ என்ற ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகள் ஜூன் 21 அன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. அதில், தமிழக காவல்துறை தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஆவணப்படுத்தியிருக்கிறது. இதன்படி தடுப்பூசி செலுத்திய மற்றும் செலுத்தாத தமிழக போலீசார் குறித்த தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.