நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஒரு சங்பரிவார் ஆதரவாளர் – எம்.பி, ரஹீம் பகீர் குற்றச்சாட்டு!

Share this News:

புதுடெல்லி (12 பிப் 2023): ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை கேரள நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கிய பெஞ்சில் உறுப்பினராக இருந்தவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி சையது அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி சையது அப்துல் நசீர் ஜனவரி 4ம் தேதி ஓய்வு பெற்றார். இன்றோடு ஆறு வாரங்களே ஆகின்றன. இந்நிலையில் இன்று அவர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை ஏ.ஏ.ரஹீம் எம்.பி. கடுமையாக விமர்சித்துள்ளார். ஒன்றிய அரசின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணாக நடைபெறுகிறது. ஏ.ஏ.ரஹீம் நியமனம் கண்டனத்துக்குரியது என்றும், இந்திய ஜனநாயகத்தின் மீது இது ஒரு கறை என்றும் ஏ.ஏ.ரஹீம் விமர்சித்துள்ளார்.

டிசம்பர் 26, 2021 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில பாரதிய ஆதிவ்கா பரிஷத் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நீதிபதி எஸ் அப்துல் நசீர் பங்கேற்றது தவறான நடவடிக்கை என்றும் அது ஒரு சங்பரிவார் வக்காலத்து அமைப்பு என்றும் ஏஏ ரஹீம் தெரிவித்துள்ளார்.

அந்த கூட்டத்தில் பேசிய நீதிபதி அப்துல் நசீர், மனுஸ்மிருதியின் மகத்தான பாரம்பரியத்தை இந்திய சட்ட அமைப்பு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று கருத்து தெரிவித்தார். இந்த வார்த்தைகள் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிக்கு இழுக்கானது. தற்போது அவருக்கு ஆளுநர் பதவி கிடைத்துள்ளது. இது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஏ.ஏ.ரஹீம் தெரிவித்துள்ளார்.

நீதிபதி அப்துல் நசீரை ஆளுநராக நியமித்துள்ள முடிவு கடும் கண்டனத்துக்குரியது. நீதிபதி அப்துல் நசீர் அத்தகைய வாய்ப்பை நிராகரிக்க வேண்டும். சட்டத்தின் மீது தேசம் நம்பிக்கை இழக்கக் கூடாது. மோடி அரசின் இத்தகைய முடிவுகள் இந்திய ஜனநாயகத்தின் மீது படிந்துள்ள கறை என்று ஏ.ஏ.ரஹீம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *