புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி ஜெ.என்.யுவில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும் ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்து ஏபிவிபி குண்டர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ் பலத்த காயம் அடைந்தார். மேலும் காயம் அடைந்த 20 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு, இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.