புதுடெல்லி (14 டிச 2022): டெல்லி துவாரகாவில் 12ம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் பள்ளிக்கு செல்லும் வழியில் பைக்கில் வந்த இருவர் மாணவியின் முகத்தில் ஆசிட் வீசினர்.
பலத்த காயமடைந்த மாணவி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது நபரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், சிறுமியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.