அதானி மெகா ஊழல் பிரச்சனை – வலுக்கும் எதிர்கட்சிகளின் போராட்டம்!

Share this News:

புதுடெல்லி (09 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் கொள்கை அறிவிப்பு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜ்யசபாவில் பதில் அளிக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒத்துழைத்த எதிர்க்கட்சிகள் இன்று முதல் மக்களவையில் அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளன.

அதானி ஊழல் விவகாரத்தில் சபை நடவடிக்கைகளை நிறுத்தி விவாதித்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

மத்திய பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காலை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். .

நேற்று மக்களவையில் காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் பிரதமர் மோடி தாக்கிப் பேசியது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply