மும்பை (27 நவ 2019): நான் மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இருக்கிறேன் என்று அஜீத் பவார் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் இணைந்து திடீர் துணை முதல்வரான அஜீத் பவார் நேற்று தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னதாக கட்சி சட்டமன்ற தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்.எல்.ஏக்கள் இல்லாததால் முதல்வர் பதவியை பட்னாவிசும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வராக கூட்டணி கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டு கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இதனை அடுத்து மீண்டும் நான் தேசியவாத காங்கிரஸில் இடம்பெற்றுள்ளேன் என்று அஜீத்பவார் தெரிவித்துள்ளார்.
அஜீத் பவாரின் முடிவை சரத் பவாரின் மகள் சுப்ரியா வரவேற்றுள்ளார். முன்னதாக இவர் குடும்பத்திலும், கட்சியிலும் பிளவு ஏற்பட்டுவிட்டது என்று மிகுந்த வருத்தத்துடன் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.