யோகி ஆதித்யநாத் அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு!

Share this News:

உத்திர பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசின் எல்லை மீறிய செயலுக்கு அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பலரது புகைப்படங்களையும், அவர்களது வீட்டு முகவரிகளையும், உத்திர பிரதேசத்தின் பல இடங்களில் யோகி அரசு பதாகைகளாக அமைத்துள்ளது.

இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், யோகி அரசை கடுமையாகச் சாடியுள்ளது மட்டுமின்றி இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் அநாகரீகமான செயல் என்றும் கண்டித்தது. மேலும் உடனடியாக அந்தப் பதாகைகளை அகற்றும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply