பிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர் தகவல்!

Share this News:

மும்பை (30 அக் 2020): பிகார் தேர்தல் பரபரப்பின் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் நடிகை அமீமிஷா படேல் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் நடிகை அமீஷா தெரிவித்துள்ளதாவது:

லோக் ஜான்ஷக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திராவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் சார்பில் தனக்குச் சொல்லப்பட்டதை மட்டுமே சொல்லவும் செயல்படவும் நிர்பந்திக்கப்பட்டேன். ஒருவேளை அதனை மறுத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட வாய்ப்புள்ளதாகவும் உணர்கிறேன். நான் மும்பை வந்து சேரும் வரை பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்தேன். என்னை சுற்றி சந்திராவின் ஆட்கள் இருந்தனர் எனக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது” என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆனால் அமிஷாவின் குற்றச்சாட்டை பிரகாஷ் சந்திரா மறுத்துள்ளார்.


Share this News:

Leave a Reply