புதுடெல்லி (09 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அதனை மறுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆத்மி கட்சி 56 இடங்கள் வரை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டது. கருத்து கணிப்புக்கள் வெளியிடப்பட்ட பிறகு பாஜக நாடாளுமன்ற., குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோருடன் அமித்ஷா, மீனாட்சி லேகி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அதன் பிறகு மீனாட்சி லேகி கூறுகையில், கருத்து கணிப்பு சரியான கணிப்பு அல்ல. அது மட்டுமின்றி இந்த புள்ளி விபரம் எடுக்கப்பட்டது மாலை 4 முதல் 5 மணி வரைக்குள். இதற்கு முன் கருத்துகணிப்புக்கள் பொய்யானது உண்டு. எங்கள் கட்சி வாக்காளர்கள் தாமதமாகவே வந்து ஓட்டளித்தனர். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. நிச்சயமாக டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்றார்.