கொச்சி (04 ஏப் 2020): கேரளாவில் தடையை மீறி காலை நடைபயிற்சி மேற்கொண்ட 41 பேர் போலீசாராக் கைது செய்யப் பட்டுள்ளனர்.
உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கரோனா தொற்று. இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தொட்டுவிட்டது. 75 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் நாடெங்கும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பொதுமக்களை வீட்டுக்குள் இருக்க வேண்டி அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இது இப்படியிருக்க கேரளாவில் ஊரடங்கு உத்தரவு தடையை மீறி காலை நடைபயிற்சி மேற்கொன்ட 41 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
விதிமுறையை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ 10000 அபராதமும் விதிக்கப்படும் என்று கேரள அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.