புதுடெல்லி (18 நவ 2019): உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றுக் கொண்டார்.
ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவி ஏற்று கொண்டார். அவர் நாட்டின் 47வது தலைமை நீதிபதியாகிறார்.
உச்ச நீதிபதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 65) நேற்று ஓய்வுபெற்றார். தனக்கு அடுத்தபடியாக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டியவரை தலைமை நீதிபதியே பரிந்துரை செய்வது மரபு.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான எஸ்.ஏ.பாப்டேவை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்தார்.
அதை ஏற்று, நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம் முடிவு செய்தது. எஸ்.ஏ.பாப்டே நியமன உத்தரவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.
இதனை அடுத்து டெல்லி ராஷ்டிரபதி பவனில் தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாப்டேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்