புதுடெல்லி (22 மே 2020): உள்ளூர் விமான போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில் அஸ்ஸாம் வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அஸ்ஸாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் முடங்கிக் கிடக்கும் விமான சேவையானது, வரும் மே 25 முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
ஆனால் அ “சிறிய நேரம் கொண்ட பயணங்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இருக்காது. இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். உள்ளூர் விமானங்கள் மூலம் வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைத்திருப்பது சாத்தியமற்றது. என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் புரி,தெரிவித்துள்ளார்.
அதேவேளை தங்கள் மாநிலத்துக்கு விமானம் மூலம் யார் வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அசாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமாந்தா மிஸ்வா சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலமான அசாம் இப்படி சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.