லக்னோ (20 டிச 2020): இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் கீழ் கட்டப்படும் புதிய மசூதி (பாபர் மசூதி) வரைபடம் நேற்று வெளியிடப் பட்டது
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்ம பூமி-பாப்ரி மஸ்ஜித் தளத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழி வகுத்ததுடன், மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அயோத்தியின் சோஹவல் தெஹ்ஸில் உள்ள தனிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியது.
இதனை அடுத்து சன்னி வக்பு வாரியத்தால் மசூதி கட்டுவதற்கு ‘இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை பாபர் மசூதி கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அது மசூதியின் வரைபடம் நேற்று (சனிக்கிழமையன்று) வெளியிடப்பட்டது , மேலும் 2021 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் அடிக்கல் நாட்டப்படும் என்று அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் கூறினார்