மும்பை (23 ஜன 2020): தன் மீது பதியப்பட்ட வழக்கிற்கான மான நஷ்ட ஈடாக, ரூ. 100 கோடி கேட்டு வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முஹம்மது அசாருத்தீன் தெரிவித்துள்ளார்.
மகாரஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் அசாருதீன் மற்றும் இருவர் ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக, டிராவல் உரிமையாளர் ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரை மறுத்துள்ள அசாருத்தீன் இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது:
“என் மீதான புகாரில் உண்மையில்லை. சர்ச்சை கிளப்பி பிரபலமடைய வேண்டும் என்பதற்காக எவ்வித ஆதாரமும் இன்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனது சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். புகார் அளித்தவர் மீது ரூ.100 கோடி மான நஷ்டஈடு கேட்பேன்!” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
I strongly rubbish the false FIR filed against me in Aurangabad. I’m consulting my legal team, and would be taking actions as necessary pic.twitter.com/6XrembCP7T
— Mohammed Azharuddin (@azharflicks) January 22, 2020