புதுடெல்லி (16 மே 2020): கொரோனா நன்கொடை வழங்கியதில் இந்தியாவின் தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக அமெரிக்க ஊடகம் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நன்கு அறியப்பட்ட தொழிலதிபரும் விப்ரோ நிறுவனருமான அசிம் பிரேம்ஜி உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட நண்கொடை வழங்கிய மூன்றாவது பெரிய தனியார் நன்கொடையாளர் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட முதல் 10 நன்கொடையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் அஜீம் பிரேம்ஜி மட்டுமே.
விப்ரோ, விப்ரோ எண்டர்பிரைசஸ் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஆகியவை இணைந்து 1,225 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.
அஜீம் பிரேம்ஜி அறக்கட்டளை மொத்தம் ரூ .1000 கோடி நன்கொடை அளித்துள்ளது, விப்ரோ ரூ .100 கோடி நன்கொடை அளித்துள்ளது, மேலும் விப்ரோ எண்டர்பிரைசஸ் ரூ .25 கோடி உதவி செய்துள்ளது என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது .
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி 1 பில்லியன் டாலர் நன்கொடையுடன் மிக உயர்ந்த இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் உள்ளனர்.
ஃபோர்ப்ஸின் தரவுத் தொகுப்பின்படி, ஏப்ரல் இறுதி வரை 77 பெரும் தொழிதிபர்கள் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக நன்கொண்டை அளித்துள்ளனர்.